சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மருத்துவ உதவிப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAR 2026 2:44PM by PIB Chennai

“அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் – மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் மருத்துவ உதவிப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்ற பட்ஜெட் அறிவிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவில்  துணை மருத்துவக் கல்வியை விரிவாக்குதல், மருத்துவ உதவிப் பணியாளர்கள் எண்ணிக்கையை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான உத்திகள் குறித்து கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், கல்வி நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க இந்த அமர்வு ஒருங்கிணைத்தது.

நாடு முழுவதும் துணை மருத்துவ சேவைகள் மற்றும் கல்வியின் நிலைத் தன்மை, தரம், அணுகல் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாக் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவ உதவியாளர் பணியிடங்களில் மேலும் ஒரு லட்சம் பேரை சேர்ப்பது என்ற அரசின் முன்முயற்சி குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த அமர்வில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை கூடுதல் செயலாளர் டாக்டர் வினோத் கோட்வால் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மக்கள் இடம்பெயர்வு, தொற்றில்லாத நோய்கள் அதிகரிப்பு, சுகாதார பராமரிப்பு உட்கட்டமைப்பின் விரிவாக்கம், மேம்பட்ட மருத்துவத் தொழில்நுட்பங்களை விரைவாக அணுகுதல் ஆகியவற்றின் மூலம், மருத்துவ உதவிப் பணியாளர்களின் தேவை அதிகரிப்பது குறித்து எடுத்துரைத்தார். நோய் கண்டறிதல், இயன்முறை மருத்துவம், அவசர சிகிச்சைப் பிரிவு, மயக்கவியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் அதிகரித்து வரும் திறன்மிக்க மருத்துவ உதவிப் பணியாளர்கள் பற்றி அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236913&reg=3&lang=1

***

AD/IR/LDN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2237136) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी