குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
எம்எஸ்எம்இ துறையில் எரிசக்தித் திறன் மற்றும் பசுமை நடவடிக்கைகளுக்கு மத்திய எம்எஸ்எம்இ அமைச்சகம் ஊக்கமளிக்கிறது
प्रविष्टि तिथि:
09 MAR 2026 1:07PM by PIB Chennai
எரிசக்தி சேவைத் திட்டங்களுக்கான தொழில்நுட்ப நிபுணத்துவம் எளிதாக கிடைக்கவும், பசுமை நடவடிக்கைகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்யவும் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், பசுமை நடைமுறைகளை மேற்கொள்ள குறைபாடின்மை, சான்றிதழ் பெற்ற நிறுவனங்களுக்கு ஆலோசனை நிதியாக ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ரூ.2 லட்சம் வரையும், தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு நிதியுதவியாக ரூ.3 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. இந்த வகை தொழில்நிறுவனங்கள், பசுமை / எரிசக்தித் திறன் தொழில்நுட்பங்களை பயன்படுத்த எம்எஸ்இ – கிஃப்ட் திட்டத்தில் 2 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் சுழற்சிப் பொருளாதார நடைமுறைகளை பின்பற்ற 25 சதவீத மூலதன மானியம் வழங்கப்படுகிறது.
இந்தத் தகவலை இன்று மாநிலங்களவையில் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்த்லாஜே கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236873®=3&lang=1
***
AD/SMB/KPG/KR
(रिलीज़ आईडी: 2237063)
आगंतुक पटल : 70