தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
புதுச்சேரி நகரத்தை உள்ளடக்கிய தமிழ்நாடு உரிமம் பெற்ற சேவை பகுதியில் பிப்ரவரி 2026-ல் நடத்தப்பட்ட சுயேச்சையான செயல்பாட்டு சோதனை விவரங்களை ட்ராய் வெளியிட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAR 2026 12:41PM by PIB Chennai
புதுச்சேரி நகரத்தை உள்ளடக்கிய தமிழ்நாடு உரிமம் பெற்ற சேவை பகுதியில் பிப்ரவரி 2026-ல் நடத்தப்பட்ட சுயேச்சையான செயல்பாட்டு சோதனை விவரங்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. நகர்ப்புற மண்டலங்கள், நிறுவனங்கள் சார்ந்த இடங்கள், ஊரகக் குடியிருப்புப் பகுதிகள் போன்றவற்றில் செல்பேசி நெட்வொர்க், செயல்பாடு குறித்து இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஐதராபாத் மண்டலத்தின் மேற்பார்வையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
புதுச்சேரி நகரில் 313.2 கிமீ தொலைவிற்கும் 8 முக்கியமான இடங்களிலும் 2026 பிப்ரவரி 5 முதல் 7 வரை சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு நிறுவனங்களில் தயாரிப்புகளில் உள்ள செல்பேசிகளில் 2 ஜி முதல் 5 ஜி வரையிலான தொழில்நுட்பச் சேவை இதன் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டது.
புதுச்சேரியில் செம்மங்கலம், சேதாரப்பேட்டை, வில்லியனூர், லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, அரியாங்குப்பம், பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. தொலைத்தொடர்பு சேவையின் நிகழ்நேர நிலைமைகள் குறித்து அரவிந்தர் ஆசிரமம், ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி விமான நிலையம், ரயில்நிலையம், ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை போன்ற இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த சோதனைகளின் விரிவான அறிக்கை www.trai.gov.in என்ற ட்ராய் வலைதளத்தில் கிடைக்கும். வேறு ஏதாவது விளக்கம் / தகவல் பெறுவதற்கு ஐதராபாத் மண்டல அலுவலக ஆலோசகர் திரு பி பிரவீண்குமாரை adv.hyderabad@trai.gov.in என்ற மின்னஞ்சலில் அல்லது 91-40-23000761 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236857®=3&lang=1
***
AD/SMB/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2237042)
வருகையாளர் எண்ணிக்கை : 9