பாதுகாப்பு அமைச்சகம்
இலங்கை கடற்படை வீரர்களின் பயிற்சியை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பியது, ஐஎன்எஸ் தரங்கிணி கப்பல்
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAR 2026 7:26PM by PIB Chennai
இலங்கை கடற்படை வீரர்களின் பயிற்சியை முடித்த பிறகு, இந்திய கடற்படையின் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் தரங்கினி, மார்ச் 06, 2026 அன்று கொழும்பு வந்தடைந்தது. இலங்கை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மற்றும் 26 பயிற்சியாளர்கள் பயிற்சிக்காக திருகோணமலையில் கப்பலில் புறப்பட்டனர்.
கப்பல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் கப்பலை கையாளவும் இந்தப் பயிற்சி விரிவான வாய்ப்புகளை வழங்கியது. இரு கடற்படைகளுக்கும் இடையே பரஸ்பர கற்றல் மற்றும் இயங்குதன்மையை இப்பயிற்சி மேலும் வலுப்படுத்தியதுடன், கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி ஈடுபாட்டை மேம்படுத்தியது.
கொழும்பு வந்தடைந்ததும், கப்பலை இலங்கை கடற்படை பிரதிநிதிகள் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். ஐஎன்எஸ் தரங்கிணியின் தலைமை அதிகாரி, மேற்கு கடற்படைப் பகுதியின் தளபதி ரியர் அட்மிரல் ஜகத் குமாரவை சந்தித்து, கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் உள்ள வழிகள் குறித்து விவாதித்தார். மூன்று நாட்கள் துறைமுகதிதில் தங்கியிருக்கும் கப்பல், இலங்கை கடற்படையுடன் பல்வேறு இருதரப்பு பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
முன்னதாக, திருகோணமலையில், இலங்கை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி, தினேஷ் பண்டார, கப்பலைப் பார்வையிட்டு, குழுவினருடன் உரையாடினார். இந்தப் பயிற்சி, வளர்ந்து வரும் இந்திய- இலங்கை கடல்சார் கூட்டாண்மையில் மற்றொரு அத்தியாயமாக செயல்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236440®=3&lang=1
***
(Release ID: 2236440)
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2236559)
வருகையாளர் எண்ணிக்கை : 11