உள்துறை அமைச்சகம்
உத்தராகண்ட் அரசின் நான்கு ஆண்டு நிறைவையொட்டி, ஹரித்வாரில் ரூ. 1,132 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
இடுகை இடப்பட்ட நாள்:
07 MAR 2026 6:07PM by PIB Chennai
உத்தராகண்ட் அரசின் நான்கு ஆண்டு நிறைவையொட்டி, ஹரித்வாரில் ரூ 1,132 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு நலத் திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு. அமித் ஷா திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில், உத்தராகண்ட் முதலமைச்சர் திரு. புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் திரு. அஜய் தாம்தா மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர், தேவபூமி உத்தராகண்ட் தனது உரிமைகளுக்காகப் போராடி வந்த ஒரு காலம் இருந்தது என்று அவர் கூறினார். நமது தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உத்தராகண்டை தனி மாநிலமாக உருவாக்கும் பணியை மேற்கொண்டார் என்று உள்துறை அமைச்சர் கூறினார்.
உத்தராகாண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டபோது, எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறிய மாநிலங்கள் எவ்வாறு உயிர்வாழும், அவற்றின் பொருளாதாரங்கள் எவ்வாறு செயல்படும் என்று கேள்வி எழுப்பினர் என்று திரு. அமித் ஷா கூறினார். உத்தரகண்ட், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மூன்று சிறிய மாநிலங்களை வாஜ்பாய் உருவாக்கினார் என்றும், இன்று மூன்று மாநிலங்களும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறியுள்ளன என்றும் அவர் கூறினார். அடல் ஜி காலத்தில் உத்தராகண்ட் உருவாக்கப்பட்டது என்றும், பிரதமர் திரு. நரேந்திர மோடி இப்போது அதை வடிவமைத்து பலப்படுத்தி வருகிறார் என்றும் திரு. ஷா கூறினார். கடந்த ஒன்பது ஆண்டுகள் உத்தராகண்டிற்கு வளர்ச்சியின் பொற்காலம் என்று அவர் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளில், மாநிலத்தின் ஒவ்வொரு பிரச்சினையையும் முறையாகத் தீர்க்க முதல்வர் திரு. புஷ்கர் சிங் தாமி ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா கூறினார். இதன் விளைவாக, இன்று உத்தராகண்ட் வேகமாக வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த 162 பேருக்கு இன்று இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதாக அவர் கூறினார். பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த இந்து, சீக்கிய, புத்த மற்றும் ஜெயின் அகதிகளுக்கு இந்த நாட்டின் மீது இந்த நாட்டின் குடிமக்களுக்கு உள்ளதைப் போலவே உரிமையும் உள்ளது என்பதை இன்று மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக திரு ஷா கூறினார். திருப்திப்படுத்தும் அரசியல் காரணமாக, இந்த அகதிகள் சுதந்திரம் பெற்ற காலம் முதல் இன்று வரை குடியுரிமையை இழந்துள்ளனர் என்று அவர் கூறினார். ஏராளமான துன்பங்களைத் தாங்கிய பிறகு, அவர்கள் தங்குமிடம் தேடி அகதிகளாக இந்தியாவுக்கு வந்ததாக அவர் கூறினார். தங்கள் மதத்தையும், தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களின் மரியாதையையும் பாதுகாக்க இங்கு வந்தவர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்கக்கூடாதா என்று உள்துறை அமைச்சர் கேட்டார். எதிர்க்கட்சித் தலைவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்க்கலாம், ஆனால் அரசு நிச்சயமாக குடியுரிமையை வழங்கும் என்று அவர் கூறினார்.
2024-ம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தலில், திரு நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமரானார் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார் - இது ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு நடந்த ஒன்று. 2024 ஆம் ஆண்டிலேயே, கட்சி ஒடிசாவில் முதல் முறையாக தனது அரசு அமைத்தது என்று அவர் கூறினார். ஹரியானாவில், கட்சி ஹாட்ரிக் சாதனை படைத்தது, மகாராஷ்டிராவிலும் அது தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பெற்றது. 2025-ம் ஆண்டில், தில்லியில் ஆளும் கட்சி முற்றிலுமாக அழிக்கப்பட்டது என்று அவர் கூறினார். பீகாரில், கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அரசை அமைத்தது. முதல் முறையாக, கேரளாவின் திருவனந்தபுரத்திலும் கட்சி வெற்றி பெற்றது, மேலும் மகாராஷ்டிராவிலும் அது மீண்டும் வெற்றியைப் பெற்றது. 2026-ம் ஆண்டில், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் கட்சி அரசுகளை அமைக்க உள்ளது என்று திரு ஷா கூறினார். 2027-ம் ஆண்டில், தேவபூமி உத்தராகண்ட் மக்கள் மீண்டும் மாநிலத்தில் கட்சியின் அரசை அமைப்பதன் மூலம் வெற்றிப் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியாவின் கலாச்சாரம் தொடர்பான பல நீண்டகால பணிகளை முடித்துள்ளதாக திரு. அமித் ஷா கூறினார். இந்திய அரசியலமைப்பின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு, இந்து அகதிகளுக்காக குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 550 ஆண்டுகளாக இந்து சமூகம் காத்திருந்த ராமர் கோயில் கட்டுமானமும் முடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். கேதார்நாத் தாம் மற்றும் பத்ரிநாத் தாம் ஆகிய நகரங்கள் முழுவதும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
எல்லை கிராமங்களை இந்தியாவின் முதல் கிராமங்கள் என்ற அங்கீகாரத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்கியுள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா கூறினார். துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் மூலம், எல்லை கிராமங்களை மேம்படுத்தவும், இந்தப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்வதைத் தடுக்கவும் ஒரு அறிவியல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். வரும் நாட்களில், தேவபூமி உத்தராகண்ட் இந்த திட்டத்தால் அதிகம் பயனடையும் என்று அவர் மேலும் கூறினார். ஊடுருவல்காரர்களைப் பாதுகாப்பதில் எதிர்க்கட்சிகள் தங்கள் முழு சக்தியையும் அர்ப்பணித்து வருவதாக திரு. ஷா கூறினார். உத்தரகண்டில், முதல்வர் திரு. புஷ்கர் சிங் தாமியின் தலைமையில், 10,000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டுள்ளன. கேதார்நாத் முதல் கன்னியாகுமரி வரை, நாடு முழுவதும் எங்கெல்லாம் ஊடுருவல்காரர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம், இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் நாங்கள் அடையாளம் கண்டு அகற்றுவோம் என்று அவர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அதை எதிர்க்கலாம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்க்கட்சித் தலைவர்களும் எதிர்க்கின்றனர் என்றும் திரு. ஷா கூறினார். அவரைப் பொறுத்தவரை, அவர்கள் எல்லாவற்றிலும் எதிர்மறையைப் பார்க்கிறார்கள். இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தம் திட்டத்தை தனது கட்சி வலுவாக ஆதரிக்கிறது என்று திரு ஷா கூறினார், ஏனெனில் ஒரு நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் அடிப்படை அலகான வாக்காளர் பட்டியல் வெளிப்படையாகவும் துல்லியமாகவும் இல்லாவிட்டால், நாட்டின் ஜனநாயகம் ஒருபோதும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று அவர்தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டில் உத்தராகண்டின் தனிநபர் வருமானம் ரூ 1,25,000 ஆக இருந்தது, இது இப்போது ரூ 2,60,000 ஆக அதிகரித்துள்ளது என்று திரு ஷா கூறினார். மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ 1,50,000 கோடியிலிருந்து ரூ 3,50,000 கோடியாக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236408®=3&lang=1
***
TV/PKV/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2236466)
வருகையாளர் எண்ணிக்கை : 20