சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹேக்கத்தான் போட்டி முடிவுகளை தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது

प्रविष्टि तिथि: 07 MAR 2026 4:30PM by PIB Chennai

தேசிய சுகாதார ஆணையம் (என்எச்ஏ), ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் கீழ் என்எச்சிஎக்ஸ் ஹாக்கத்தான் போட்டியை நடத்தியது. இந்தப் போட்டியின் இறுதி நிகழ்ச்சி மார்ச் 6,7 தேதிகளில் ஹைதராபாத் ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அணிகள் தங்களது தீர்வுகளை அறிமுகப்படுத்தின.

என்எச்சிஎக்ஸ் என்பது மருத்துவமனைகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நோயாளிகள் இடையே மருத்துவ காப்பீட்டு கோரிக்கைகளை எளிதாகவும் ஒரே தரநிலையிலும் செயல்படுத்த உதவும் ஒரு டிஜிட்டல் அமைப்பாகும்.  இந்த ஹேக்கத்தானில் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், மாணவர்கள் மற்றும் டெவலப்பர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மொத்தம் 112 தீர்வுகள் சமர்ப்பிக்கப்பட்டன. நிபுணர்கள் அவற்றை மதிப்பீடு செய்து ஒவ்வொரு பிரச்சினைக்கும் சிறந்த அணிகளை தேர்ந்தெடுத்தனர்.

நிகழ்ச்சியில் அரசு, மருத்துவம், காப்பீடு மற்றும் தொழில்நுட்ப துறைகளின் பல தலைவர்கள் கலந்து கொண்டு இந்தியாவில் டிஜிட்டல் மருத்துவ காப்பீட்டு அமைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

நிகழ்ச்சியின்போது ஹேக்கத்தான் மற்றும் ஐடியாத்தான் வெற்றியாளர்கள் பாராட்டப்பட்டனர். இந்த நிகழ்ச்சி இந்தியாவின் டிஜிட்டல் மருத்துவ காப்பீட்டு அமைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2236366&reg=3&lang=1

***

TV/PKV/RK


(रिलीज़ आईडी: 2236426) आगंतुक पटल : 66
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी