சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

போடிநாயக்கனூர் நகைக்கடையில் பிஐஎஸ் அதிகாரிகள் சோதனை

இடுகை இடப்பட்ட நாள்: 06 MAR 2026 7:21PM by PIB Chennai

 

இந்திய தரநிர்ணய அமைவனத்தின்  கோயம்புத்தூர் கிளை அலுவலக அதிகாரிகள் குழு, 06 மார்ச் 2026 அன்று தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள ஒரு நகைக்கடையில் விதிமீறல் ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், இயக்குனர் விநித் குமார், இணை இயக்குனர், திரு. அறிவழகன் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

சோதனையின் போது, Hallmarking Unique Identification (HUID) குறியீடு இல்லாமல் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்ட சுமார் 0.5 கிலோக்கும் மேற்பட்ட தங்க நகைகள்,  (மதிப்பு சுமார் ₹75 லட்சம்) கண்டறியப்பட்டன. HUID இல்லாமல் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டதால் அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விதிமுறைகளின்படி தங்க நகைகள் விற்பனைக்கு முன் ஹால்மார்க் மற்றும் HUID குறியீடு கட்டாயமாக இருக்க வேண்டும்.

 

BIS கோயம்புத்தூர் கிளை அலுவலகத்தின் மூத்த இயக்குநர் மற்றும் தலைவர் திருமதி ஜி. பவானி கூறுகையில், பிஐஎஸ் சட்டம், 2016ன் கீழ் குற்றம் செய்த நகைக்கடை மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த குற்றத்திற்கு ஒரு ஆண்டுவரை சிறைத் தண்டனை அல்லது குறைந்தபட்சம் ₹1,00,000 அபராதம், அல்லது விற்பனை செய்யப்பட்ட பொருளின் மதிப்பின் 5 மடங்கு வரை அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தெரிவித்தார்.

பொதுமக்கள் HUID இல்லாத ஹால்மார்க் தங்க நகைகள் விற்பனை போன்ற முறைகேடுகளை கண்டால், அதை BIS கோயம்புத்தூர் கிளை அலுவலகத்திற்கு  தகவல் அளிக்கலாம்.

மேலும் புகார்களை BIS Care App மூலம் அல்லது ctbo@bis.gov.in / hctbo@bis.gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பியும் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும்.

BIS தொடர்பான மேலும் தகவல்களுக்கு www.bis.gov.in மற்றும் manakonline.in இணையதளங்களை பார்வையிடவும்.

****

TV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2236105) வருகையாளர் எண்ணிக்கை : 156
இந்த வெளியீட்டை படிக்க: English