சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகள் ஓய்வெடுக்க புதிய வசதி திறப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 06 MAR 2026 5:29PM by PIB Chennai

ஜிப்மர் மருத்துவமனை வளாகத்திற்குள் புதிதாக கட்டப்பட்ட நான்காவது நோயாளி தங்கும் மையத்தை ஜிப்மர் இயக்குனர் வீர்சிங் நேகி 2026 மார்ச் 6 அன்று தொடங்கி வைத்தார். ரூ. 15 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த தங்கும் மையம் புதுச்சேரியைச் சேர்ந்த கோதி சாரிடபிள் டிரஸ்ட் அமைப்பின் சார்பில் நன்கொடையாக வழங்கப்பட்டது.

  

 நிகழ்ச்சியில் திருமதி சுமித்ரா கோதி மற்றும் திரு. சஞ்சய் கோதி, ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் சாகா வினோத் குமார் மற்றும் நிர்வாக துணை இயக்குநர் திரு.  ரங்கபாஷ்யம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நோயாளி தங்கும் மையம், சிகிச்சைக்காக ஜிப்மருக்கு வருகை தரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் ஓய்வெடுக்க வசதியான இடமாக அமைக்கப்பட்டுள்ளது. தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு மருத்துவமனை வளாகத்திலேயே பாதுகாப்பான மற்றும் வசதியான ஓய்வு இடமாக இது பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோயாளிகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து வழங்கி வரும் நன்கொடைக்கு ஜிப்மர் தனது மனமார்ந்த நன்றியை சம்பந்தப்பட்ட அறக்கட்டளைக்கு தெரிவித்துக் கொண்டது.

***

TV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2236023) வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க: English