PIB Backgrounder
பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான முக்கிய நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
06 MAR 2026 11:18AM by PIB Chennai
மகளிருக்கு அதிகாரமளிப்பதன் மூலம் குடும்பங்களின் வாழ்வதாரம் மேம்படுவதுடன், வளமான சமூகத்தைக் கொண்ட நாட்டைக் கட்டமைக்க உதவுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பெண்களின் பொருளாதார மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதற்கு மகளிரின் முன்னேற்றம் சம அளவிலான பங்களிப்பை கொண்டுள்ளது.
இந்தத் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப சுய உதவிக்குழுக்கள், ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவுக்கான தளங்களை உருவாக்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெண் குழந்தைகளுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அவர்களது கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை தடையின்றி பெறுவதற்கு வகை செய்வதுடன், ஒட்டுமொத்த நாட்டிற்கும் வலுசேர்க்கிறது.
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம், செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் பெண்களுக்கு கல்வி அளிப்பதை உறுதி செய்வதுடன், முதலீடுகளையும் ஊக்குவிக்கிறது. செல்வமகள் சிறுசேமிப்புத் திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ.250 முதல் ஆண்டொன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சேமிக்க வகை செய்கிறது. இந்த வைப்புத் தொகைக்கு ஆண்டொன்றுக்கு 8.2 சதவீதம் கூட்டு வட்டி அளிக்கப்படுகிறது. இந்த சிறுசேமிப்புத் திட்டத்தை 15 ஆண்டுகளுக்கு அனுமதிக்கப்படுவதுடன், இது தொடங்கியது முதல் 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி மற்றும் முதிர்வு தொகைக்கு வருமான வரி சட்டப்பிரிவு 80சி-ன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவதுடன், திறன் மேம்பாட்டிற்கும் உதவுகிறது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் பெண்களை தொழில்முனைவோராகவும், வளமான பொருளாதாரத்திற்கு பங்களிப்போர்களாகவும் உருவாக்க உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235818®=3&lang=1
***
TV/SV/RJ/RK
(रिलीज़ आईडी: 2235887)
आगंतुक पटल : 90