கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரம்மபுத்திரா ஆற்றில் இந்தியாவின் முதல் ஆற்று வழி கலங்கரை விளக்கங்கள்: திரு. சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டினார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 MAR 2026 4:15PM by PIB Chennai

இந்தியாவின் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தில் ஒரு முன்னோடி முயற்சியாக, பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் நான்கு 'ஆற்று வழி கலங்கரை விளக்கங்கள்' (River Lighthouses) அமைக்க மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டினார். கௌஹாத்தியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய அவர், இந்தியாவில் உள்நாட்டு நீர்வழியில் இத்தகைய உள்கட்டமைப்பு அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டார்.

சுமார் 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திப்ருகார், கம்ரூப், நகோன் மற்றும் விஸ்வநாத் ஆகிய மாவட்டங்களில் இந்த கலங்கரை விளக்கங்கள் அமையவுள்ளன. இவை 20 மீட்டர் உயரம் கொண்டவை மற்றும் முற்றிலும் சூரிய சக்தியால் இயங்கக்கூடியவை. வெறும் வழிகாட்டியாக மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அருங்காட்சியகம், சிற்றுண்டிச்சாலை மற்றும் பூங்காக்களும் இங்கு அமைக்கப்பட உள்ளன.

பிரம்மபுத்திரா நீர்வழியில் சரக்கு போக்குவரத்து 53% அதிகரித்துள்ள நிலையில், 24 மணி நேரப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இவை உதவும். சாலைப் போக்குவரத்தை விட நீர்வழிப் போக்குவரத்து செலவு குறைவானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235574&reg=3&lang=1

 செய்தி வெளியீட்டு எண்:2235574

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2235781) வருகையாளர் எண்ணிக்கை : 52
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese