இந்திய போட்டிகள் ஆணையம்
பாக்மனே டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் சில பங்குகளை பாக்மனே நிறுவனத்தின் முதன்மை அலுவலகம் வாங்க இந்திய வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதல்
இடுகை இடப்பட்ட நாள்:
05 MAR 2026 10:45AM by PIB Chennai
பாக்மனே முதன்மை அலுவலகம், பாக்மனே டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிற நிறுவனங்களின் (நேரடியாக/மறைமுகமாக) சில பங்குகளை வாங்குவது தொடர்பான முன்மொழிவை இந்திய வணிகப் போட்டி ஆணையம் அங்கீகரித்துள்ளது.
முன்மொழியப்பட்ட இணைப்பு பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது: (i) பாக்மனே டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட், அதன் முழு உரிமையாளரான துணை நிறுவனமான பாக்மனே கிரீன் பவர் எல்எல்லி ( BGPL) உட்பட பாக்மனே பிரைம் ஆபிஸ் ஆர்இஐடி நிறுவனத்தால் நேரடியாக கையகப்படுத்துதல்;
(ii) பாக்மனே ரியோ பிரைவேட் லிமிடெட்-ன் ( BRPL ) கையகப்படுத்தல்
(iii) பாக்மனே கேபிடல் டெக் பார்க்கில் உள்ள லக்சரை பாக்மனே கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டிலிருந்து கையகப்படுத்தல் ;
(iv) இலக்கு நிறுவனங்களில் தங்கள் பங்குகளை கையகப்படுத்துபவர் ஆர்இஐடி-க்கு மாற்றுவதைக் கருத்தில் கொண்டு, கையகப்படுத்துபவர் ஆர்இஐடி-ன் ஸ்பான்சர் குழு மற்றும் இலக்கு நிறுவனங்களின் சில மூன்றாம் தரப்பு பங்குதாரர்களுக்கு கையகப்படுத்துபவர் ஆர்இஐடி-ன் அலகுகள் வழங்கப்படும்.
கையகப்படுத்தும் ஆர்இஐடி, ஜூலை 15 , 2025 அன்று விதிமுறைகளின் கீழ் ஒரு ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளையாக செபி-யில் பதிவு செய்யப்பட்டது .
இலக்கு நிறுவனங்கள் வணிக ரீதியான ரியல் எஸ்டேட், விருந்தோம்பல் வணிகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி போன்ற தொடர்புடைய சேவைகளை மேம்படுத்துதலில் ஈடுபட்டுள்ளன.
ஆணையத்தின் விரிவான உத்தரவு பின்னர் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2235404®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2235516)
வருகையாளர் எண்ணிக்கை : 54