பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹோலிப் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர், சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 04 MAR 2026 9:13AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்குத் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். வண்ணங்கள், மகிழ்ச்சி ஆகியவை நிறைந்த இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, செழிப்பு, வெற்றி ஆகியவற்றைக் கொண்டுவரட்டும் என்று அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஹோலி பண்டிகை முழு சூழலையும் புதிய ஆற்றலால் நிரப்புகிறது எனவும் இதுவே அதன் மிகப்பெரிய சிறப்பு என்றும் பிரதமர் கூறியுள்ளார். இந்தப் பண்டிகையின் போது எங்கும் காணப்படும் மகிழ்ச்சியின் துடிப்பான வண்ணங்கள் அனைவரையும் மகிழ்ச்சியிலும், கொண்டாட்ட உணர்விலும் திளைக்க செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தையும் பகிர்ந்துள்ளார்.

துடிப்பான வண்ணங்கள் மற்றும் நறுமணம் கொண்ட வசந்த காலக் காற்றின் மயக்கும் தழுவுதலில் மலர்ந்த அழகான தாமரை மலர்களைப் போல, அன்பின் புகழ்பெற்ற கொண்டாட்டம் வாழ்க்கையையே எழுப்பும் மகிழ்ச்சியான மெல்லிசைகளால் நிறைந்து, உற்சாகமாக மலர்கிறது என்று சுபாஷிதம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நாட்டு மக்கள் அனைவருக்கும் ஹோலிப் பண்டிகை வாழ்த்துகள். வண்ணமும் உற்சாகமும் நிறைந்த இந்தப் பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சியின் வசந்தத்தைக் கொண்டுவரட்டும். அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, செழிப்பு, வெற்றியின் வண்ணங்கள் பொழியட்டும்."

"ஹோலிப் பண்டிகை புதிய சக்தியைப் புகுத்துகிறது. அதுதான் இந்தப் பண்டிகையின் சிறந்த அம்சம். வண்ணங்கள் எல்லா இடங்களிலும் பரவி, அனைவரையும் மகிழ்ச்சியால் நிரப்புகிறது."

***

(Release ID: 2235227)

TV/PLM/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2235296) வருகையாளர் எண்ணிக்கை : 67