அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புதிய கண்டுபிடிப்பு மூலம் 50 ஆண்டுகால உயிரியல் விதியை மாற்றியமைத்த இந்திய விஞ்ஞானிகள்
இடுகை இடப்பட்ட நாள்:
02 MAR 2026 3:38PM by PIB Chennai
பாக்டீரியாக்களின் மரபணு ஒழுங்குமுறை குறித்த 50 ஆண்டுகால அறிவியல் விதியை இந்திய விஞ்ஞானிகள் மாற்றியமைத்துள்ளனர். பொதுவாக, பாக்டீரியாக்கள் தங்கள் மரபணுக்களைச் செயல்படுத்த 'சிக்மா சுழற்சி' என்ற முறையைப் பயன்படுத்துவதாகவும், இதில் சிக்மா காரணி தொடக்கத்தில் பிணைந்து பின்னர் பிரிந்துவிடும் என்றும் பாடப்புத்தகங்களில் கூறப்பட்டு வந்தது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் போஸ் கல்வி நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், இந்தச் சுழற்சி முறை அனைத்து பாக்டீரியாக்களுக்கும் பொருந்தாது என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, 'பேசிலஸ் சப்டிலிஸ்' போன்ற பாக்டீரியாக்களில் சிக்மா காரணி பிரியாமல், முழு செயல்முறை முழுவதும் பிணைந்தே இருப்பதை நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பு பாக்டீரியாக்களின் உடலியல் மற்றும் மரபணு பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ளப் புதிய பாதையை வகுத்துள்ளது. இது நோய்த்தொற்றைத் தடுக்கும் மேம்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்புகளை உருவாக்கவும், உயிரி எரிபொருள் மற்றும் மக்கும் பிளாஸ்டிக் தயாரிப்பில் ஈடுபடும் நுண்ணுயிரிகளைத் திறம்பட வடிவமைக்கவும் பெரிதும் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234503®=3&lang=1
***
TV/VK/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2234753)
வருகையாளர் எண்ணிக்கை : 10