குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAR 2026 5:27PM by PIB Chennai

கொல்லம், பத்தனாபுரத்தில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவைக் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (01.03.2026) தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை குடியரசுத் துணைத் தலைவர், 100 ஆண்டுகளை நிறைவு செய்வது மிகச் சில நிறுவனங்களால் மட்டுமே அடையப்பட்ட குறிப்பிடத்தக்க மைல்கல் என்று கூறினார. இந்தப் பள்ளி ஒரு நூற்றாண்டாக மனங்களை வடிவமைத்து, குணங்களை வளர்த்து, எதிர்காலத்தை கட்டியெழுப்பி வருகிறது என்றும், பல தலைமுறையாக பல மாணவர்களை, பொறுப்புள்ள மக்களாகவும், தலைவர்களாகவும், தொழில் வல்லுநர்களாகவும் உருவாக்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு நிறுவனத்தின் உண்மையான பலமும் அதன் உள்கட்டமைப்பில் மட்டுமல்லாமல், அதன் மதிப்புகளிலும் உள்ளது என்று அவர் கூறினார். மாணவர்கள் பெரிய கனவுகளைக் காணவும், கடினமாக உழைக்கவும், பணிவாக இருக்கவும், தங்கள் பள்ளியால் கற்பிக்கப்பட்ட மதிப்புகளை நிலைநிறுத்தவும் வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

இந்த விழாவில் கேரள ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மத்திய பெட்ரோலியம், சுற்றுலாத்துறை இணையமைச்சர் திரு சுரேஷ் கோபி, கிழக்கு கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர் மூன்றாம் பாசிலியோஸ் மார்த்தோமா மேத்யூஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234221&reg=3&lang=1     

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2234270) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी