தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்பெயினில் நடைபெறும் உலக மொபைல் கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAR 2026 12:35PM by PIB Chennai

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா, 2026 மார்ச் 2 முதல் மார்ச் 5, 2026 வரை ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெறும் உலக மொபைல் போன் கூட்டமைப்பு மாநாட்டில் (மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2026) இந்தியா சார்பில் பங்கேற்கிறார். இந்த மாநாடு உலகின் மிகப்பெரிய, மிகவும் செல்வாக்கு மிக்க தொலைத்தொடர்பு துறை கூட்டங்களில் ஒன்றாகும்.

இந்தப் பயணத்தின் போது, மத்திய அமைச்சர், இந்த மாநாட்டில் இந்திய அரங்கத்தைத் திறந்து வைக்கிறார். இது இந்தியாவின் வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு உற்பத்தி திறன்கள் மற்றும் புதுமை சூழல் அமைப்பை வெளிப்படுத்த ஒரு உலகளாவிய தளத்தை வழங்குகிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும்" என்ற தலைப்பில் நடைபெறும் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்திலும் மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா உரையாற்ற உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234126&reg=3&lang=1    

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2234261) வருகையாளர் எண்ணிக்கை : 100
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi