அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மறுசீரமைப்பு செல்கள் மற்றும் சென்சார்களுக்கான வசதியை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 MAR 2026 3:14PM by PIB Chennai

மத்திய அறிவியல் - தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (01.03.2026) திருவனந்தபுரம் ராஜீவ் காந்தி உயிரி தொழில்நுட்ப மையத்தில் புதிய அதிநவீன "மறுசீரமைப்பு செல்கள் மற்றும் சென்சார்களுக்கான மத்திய வசதியை" திறந்து வைத்தார். புதிய மறுசீரமைப்பு செல் வசதி, மருந்து கண்டுபிடிப்பு, மருத்துவம், வேளாண் மரபியல் துறை ஆகியவற்றை மேம்படுத்தும்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், உற்பத்தி, சுகாதாரம்,  நிலையான வளர்ச்சி ஆகியவற்றின் எதிர்காலத்தை உயிரி தொழில்நுட்பம் வடிவமைக்கும் எனவும் உயிரி தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்திற்கு இந்தியா தயாராகி வருவதாகவும் கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், உயிரி தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத கொள்கை ஆதரவைப் பெற்றுள்ளது எனவும், இதனால் இந்தியா உலகளாவிய உயிரி தொழில்நுட்ப மையமாக உருவெடுக்க முடிந்தது என்றும் அமைச்சர் கூறினார். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிரி தொழில்நுட்பக் கொள்கையைப் பற்றிக் குறிப்பிடுகையில், பிரத்யேக உயிரி தொழில்நுட்பக் கொள்கையை வெளியிட்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றார்.

இந்தியாவின் உயிரி தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிடுகையில், கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் உயிரி பொருளாதாரம் கிட்டத்தட்ட பதினாறு மடங்கு விரிவடைந்துள்ளது எனவும் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து கிட்டத்தட்ட 166 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வளர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.  வரும் ஆண்டுகளில் 300 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் இலக்குடன் இந்தியா உள்ளது என்று அமைச்சர் கூறினார். 2014-ம் ஆண்டில் சுமார் 70 ஆக இருந்த உயிரி தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை இப்போநு 11,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234170&reg=3&lang=1   

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2234256) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी