நிதி அமைச்சகம்
மத்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வாய்ப்புகள் குறித்து நிதி சேவைகள் துறை இரண்டு நாள் பயிலரங்கை நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
28 FEB 2026 5:31PM by PIB Chennai
மத்திய நிதி சேவைகள் துறை, அகமதாபாத்தில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா அகாடமியில் 2026 பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயிலரங்கை நடத்தியது. பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையை செயல்படுத்துவது மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி சேவைகளை திறம்பட வழங்குவது ஆகியவை குறித்து இந்தப் பயிலரங்கு நடைபெற்றது.
பொது நிதி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டையும் உள்ளடக்கிய தன்மையையும் நிதி சேவைகளுக்கான சமமான அணுகலையும் ஊக்குவிப்பதில் அரசின் உறுதிப்பாட்டையும் இது எடுத்துரைத்தது.
இந்தப் பயிலரங்கில் இந்திய ரிசர்வ் வங்கி, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள், 12 பொதுத்துறை வங்கிகள், 7 பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் 7 பொதுத்துறை நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233948®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2233984)
வருகையாளர் எண்ணிக்கை : 9