PIB Headquarters
ஆற்றல் மூலங்களின் பரிணாம வளர்ச்சி
இடுகை இடப்பட்ட நாள்:
28 FEB 2026 11:01AM by PIB Chennai
ஒவ்வொரு நாளும், வீடுகள், பள்ளிகள், பண்ணைகள், தொழிற்சாலைகள, மருத்துவமனைகள் என பலவற்றில் விளக்குகள் எரிவதுடன் மின் சாதனங்கள் பயன்படுத்தப்படும்போது, அந்த மின் சக்தி எங்கிருந்து வருகிறது என்பதைப் பற்றி நாம் அரிதாகவே யோசிப்போம். அறையை குளிர்விக்கும் மின்விசிறி, வயலுக்கு நீர் பாய்ச்சும் பம்ப், பயணிகளை ஏற்றிச் செல்லும் ரயில் என அனைத்தும் பின்னணியில் அமைதியாக இயங்கும் ஒரு பரந்த, கவனமாக நிர்வகிக்கப்படும் ஆற்றல் அமைப்பைச் சார்ந்துள்ளது.
இப்போது, இந்தியாவில் மின் சக்தி அமைப்பு மாறி வருகிறது. நாடு முன்னேறும்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் நிறுவனத்திற்கும் நம்பகமாக, மலிவு விலையில், தூய்மையான, மிகவும் பாதுகாப்பான எரிசக்தியை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது.
கிராமப்புறங்களில் சராசரி மின்சார கிடைக்கும் தன்மை 2014-ல் 12.5 மணிநேரத்திலிருந்து தற்போது 22.6 மணிநேரமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நகர்ப்புறங்கள் இப்போது 23.4 மணிநேரம் வரை மின்சார விநியோகத்தை அனுபவிக்கின்றன. இது 2014-ல் 22.1 மணிநேரமாக இருந்தது. இந்த முன்னேற்றங்கள் நாடு முழுவதும் மின்சார சேவைகளின் நகுறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கின்றன.
இப்போது, உலகின் முதல் மூன்று எரிசக்தி நுகர்வு நாடுகளில் இந்தியாவும் ஒன்று, மேலும் மின்சாரத் தேவை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. மொத்த மின்சார உற்பத்தி 2023 - 24-ம் ஆண்டில் 1,739.09 பில்லியன் யூனிட்டுகளிலிருந்து 2024 - 25 ஆம் ஆண்டில் 1,829.69 ஆக அதிகரித்துள்ளது. இது 5.21% வளர்ச்சியாகும். 2025 - 26-ம் ஆண்டில், உற்பத்தி இலக்கு 2,000.4 பில்லியன் யூனிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகரித்தல், தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தைத் தொடங்குதல் , அணுசக்தி பயன்பாடு தொடர்பான சட்டம் ஆகியவை மூலம் எரிசக்தி செயல் திறன் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் எரிசக்தி வளர்ச்சி, பழையதை ஒரே இரவில் வந்துவிடவில்லை. 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான நீண்டகால உறுதிப்பாட்டை நோக்கி இந்தியா நகர்கிறது.
* சூரிய சக்தி விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. நிறுவப்பட்ட சூரிய சக்தி திறன் 2014-ல் 3 ஜிகாவாட்டிலிருந்து ஜனவரி 2026-ல் 140 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது .
* இந்த அதிகரிப்பு மொத்த நிறுவப்பட்ட மின்சார திறனில் புதைபடிவமற்ற எரிபொருள் திறனை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க உதவியுள்ளது.
* இந்தியாவின் ஒட்டுமொத்த நிறுவப்பட்ட காற்றாலை திறன் ஜனவரி 2026-ல் சுமார் 54.65 ஜிகா வாட்டை எட்டியது.
*_பிரதமரின் சூரிய சக்தி இல்லத் திட்டம் 23.9 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
இந்தியா 2070-ம் ஆண்டில் நிகர பூஜ்ஜிய உறுதிப்பாட்டை நோக்கி நகரும் போது, வளர்ந்து வரும் எரிசக்தி ஆதாரங்களின் வளர்ச்சியும் நிலைத்தன்மையும் ஒன்றாக இணைந்து பயணக்கின்றன.
இந்தியா வெறும் மின்சாரத்தை உற்பத்தி செய்யவில்லை. பாதுகாப்பான, நிலையான, தற்சார்பு கொண்ட, எதிர்காலத்திற்கான எரிசக்தியை உற்பத்தி செய்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233832®=3&lang=1
***
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2233905)
வருகையாளர் எண்ணிக்கை : 7