கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
பிரம்மபுத்திரா நதிநீர் போக்குவரத்தை வலுப்படுத்த மூன்று புதிய திட்டங்கள் மத்திய அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 FEB 2026 6:11PM by PIB Chennai
மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனாவால், அசாம் மாநிலம் திப்ருகரில் தேசிய நீர்வழிப்பாதை-2-ன் கீழ் பிரம்மபுத்திரா ஆற்றில் மூன்று முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் இத்திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள்:
போகிபீல் சுங்க மற்றும் குடிவரவு வளாகம்: சுற்றுலா மற்றும் சரக்கு போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் நவீன முனையமாக இது செயல்படும்.
துப்ரி சுங்க மற்றும் குடிவரவு வளாகம்: வங்கதேசம் மற்றும் பூடான் உடனான எல்லை கடந்த வணிகத்தை மேம்படுத்தும் கேந்திரமாக இது அமையும்.
திப்ருகர் பாரம்பரிய கட்டிடம்: இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தின் புதுப்பிக்கப்பட்ட இந்த வரலாற்று கட்டிடம், நிர்வாகத் தேவைகளுடன் நதிநீர் சுற்றுலாவையும் ஊக்குவிக்கும்.
இந்த விழாவில் அசாம் மாநில அமைச்சர்கள் திரு.பிரசாந்தா புகான், திரு.ஜோகன் மோகன், திரு. பிமல் போரா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராமேஸ்வர் டெலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு. சோனாவால், "பிரம்மபுத்திரா ஆறு எங்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, அது எங்களின் வரலாறு மற்றும் எதிர்காலம். இத்திட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களில் சரக்கு கையாளுதல் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளைப் பெருக்கும்" என்றார். இத்திட்டங்கள் போக்குவரத்துச் செலவைக் குறைப்பதுடன், வடகிழக்கு இந்தியாவை நாட்டின் பொருளாதார வளர்ச்சி இயந்திரமாக மாற்ற உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
***
(Release ID: 2233621)
TV/VK/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2233761)
வருகையாளர் எண்ணிக்கை : 11