நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ், உணவு மானிய விநியோக நடைமுறைகள் புதுச்சேரியில் தொடங்கப்படும்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே கைலாஷ்நாதன், முதலமைச்சர் திரு என். ரங்கசாமி முன்னிலையில் இத்திட்டத்தை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைக்கிறார்

प्रविष्टि तिथि: 25 FEB 2026 6:14PM by PIB Chennai

நாட்டின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், மானிய விநியோக நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய அரசு பிப்ரவரி 26 அன்று புதுச்சேரியில் பிரதமரின் ஏழைகள் நல உணவு தானியத் திட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் பரிவர்த்தனை அடிப்படையிலான உணவு மானிய விநியோகத் திட்டம் தொடங்கப்படவுள்ளது.

இந்த முன்னோடித் திட்டத்தை மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே கைலாஷ்நாதன், முதலமைச்சர் திரு என் ரங்கசாமி ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைக்கிறார்.

டிஜிட்டல் நாணயம் அல்லது மின்னணு ரொக்கப் பரிவர்த்தனை என்பது பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் செயல்பாடாகும். இது ரிசர்வ் வங்கியால் செயல்படுத்தப்படுகிறது. 

 

புதுச்சேரி அரசு, ரிசர்வ் வங்கி, பொது நிதி மேலாண்மை அமைப்பு மற்றும் கனரா வங்கி ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இந்த முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இது மானிய நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன், பொறுப்புணர்வை அதிகரிப்பதுடன், பயனாளிகளுக்கான அதிகாரமளித்தல் நடவடிக்கைகளை மேம்படுத்த உதவுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232780&reg=3&lang=1

 

AD/SV/RJ/SH


(रिलीज़ आईडी: 2233321) आगंतुक पटल : 99
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी