அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புதிய அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் நாடுமுழுவதும் புதுமை கண்டுபிடிப்புகளை அதிகரிக்கும் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 4:16PM by PIB Chennai
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நாட்டின் முதல் மாநில புதுமைக் கண்டுபிடிப்பு இயக்கத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆய்வக வசதிகள் பெருநகரங்களைத் தாண்டி மாவட்டங்கள், கிராமங்கள் என அனைத்து பகுதிகளிலும் ஒவ்வொருவருக்கும் செல்ல வேண்டும் என்று கூறினார். திரிபுரா மாநிலத்தின் இந்த முயற்சி தொழில்நுட்பத்தை பரவலாக்குவதற்கும் வாய்ப்பை ஜனநாயகப்படுத்துவதற்கும் ஒரு சிறந்த முயற்சி என்று பாராட்டு தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில் கிட்டத்தட்ட 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் (ATLs) நிறுவப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதை 50,000 ஆக விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த முடிவு புதுமை கண்டுபிடிப்பு சூழலை சிறு நகரங்கள் வரை ஆழமாக கொண்டு சென்று, நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, நித்தி ஆயோக் தலைவர் திரு சுமன் பெரி, நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. சரஸ்வத், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233098®=3&lang=1
***
TV/PLM/RK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2233206)
வருகையாளர் எண்ணிக்கை : 10