உரங்கள் துறை
ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தில் மறுசீரமைக்கப்பட்ட இந்தி ஆலோசனைக் குழுவின் தலைவராக மத்திய அமைச்சர் திரு ஜே பி நட்டா நியமனம்
மத்திய இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 FEB 2026 12:31PM by PIB Chennai
ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்திற்கான இந்தி ஆலோசனைக் குழுவை மத்திய அரசு மறுசீரமைத்துள்ளது. ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா இந்தக் குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் அதன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குழுவின் மறுசீரமைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ தீர்மானம் இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட குழுவில் உறுப்பினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற விவகார அமைச்சகம் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்துள்ளது: திரு மனோஜ் டிக்கா, திரு சஷாங்க் மணி, ஆகிய மக்களவை உறுப்பினர்களும், திருமதி எஸ் ஃபாங்னோன் கோன்யாக், திரு சஞ்சய் ஜா ஆகிய மாநிலங்களவை உறுப்பினர்களும் இதில் அடங்குவர்.
கூடுதலாக, அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவில் திருமதி மாலா ராஜ்ய லக்ஷ்மி ஷா, திரு சத்பால் பிரம்மச்சாரி ஆகிய இரண்டு மக்களவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவில் பல்வேறு அதிகாரபூர்வ மற்றும் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட நான்கு உறுப்பினர்களும், உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறையிலிருந்து மூன்று உறுப்பினர்களும், ஹைதராபாத்தில் உள்ள விஸ்வ இந்தி பரிஷத், இந்தி பிரச்சார சபை ஆகியவற்றிலிருந்து தலா ஒரு பிரதிநிதியும் அடங்குவர்.
மொத்தத்தில், ஆலோசனைக் குழுவில் ஒரு தலைவர், ஒரு துணைத் தலைவர், 15 பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள், 37 அதிகாரபூர்வ உறுப்பினர்கள் உள்ளனர். குறிப்பாக, அதிகாரப்பூர்வ உறுப்பினர்களில் அமைச்சகத்தின் மூன்று செயலாளர்கள் அடங்குவர். உரத் துறையைச் சேர்ந்த ஒரு கூடுதல் அல்லது இணைச் செயலாளர் குழுவின் உறுப்பினர் செயலாளராகச் செயல்படுவார்.
அமைச்சகம் மற்றும் அதன் துணை அலுவலகங்களின் அலுவல் நிர்வாகப் பணிகளில் இந்தி மொழியை படிப்படியாகப் பயன்படுத்துவது குறித்த பரிந்துரைகளை ஆய்வு செய்து வழங்குவதே இந்தக் குழுவின் முதன்மைப் பணியாகும். இந்தக் குழு அமைக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் பதவிக்காலத்தைக் கொண்டிருக்கும்.
இந்தக் குழுவின் தலைமையகம் புதுதில்லியில் இருந்தாலும், அதன் கூட்டங்கள் நாடு முழுவதும் உள்ள பிற இடங்களிலும் கூட்டப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232985®=3&lang=1
***
AD/PLM/RK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2233041)
வருகையாளர் எண்ணிக்கை : 15