திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் திறனறி தகுதிக்கான கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் தேசிய திறனறி தகுதிக்கான ஆணையம் முக்கியப் பங்கு வகிக்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2026 5:43PM by PIB Chennai

இந்தியாவில் திறனறி தகுதிக்கான கட்டமைப்புகள் ஒருமைப்பாடு, தொழில்துறை சார்ந்த பணிகள் மற்றும் எதிர்கால இந்தியாவிற்கு தேவையான திறனை வளர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை பராமரிப்பது தேசிய திறனறி தகுதி ஆணையம் முக்கியப் பங்கு வகிப்பதாக மத்திய திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் தேபஸ்ரீ முகர்ஜி தெரிவித்துள்ளார். 

திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், குறுகிய மற்றும் நீண்டகால பயிற்சி அளிக்கும் திட்டத்தையும் சர்வதேச அளவிலான தர நிலைகளுக்கு ஏற்ப தொழிலாளரின் திறனை மேம்படுத்தும் வகையிலும், தொழிற்சாலைகளுக்கு தேவையான திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கிடும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பல்வேறு அமைப்புகளின் தகுதிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே தகுதி பெற்றுள்ள அமைப்புகளுக்கான அங்கீகாரத்தை நீட்டிப்பது, தேசிய பணிகள் தொடர்பான தரநிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் மொத்தம் 13 அமைப்புகள் தங்களது தகுதிகள் குறித்த விவரங்களை தேசிய அளவிலான குழுவிடம் சமர்ப்பித்துள்ளன. நாஸ்காங், தானியங்கி திறன் மேம்பாட்டுக் குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களின் தகுதி நிலை குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டது.     

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232756&reg=3&lang=1

***

TV/SV/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2232804) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी