ரெயில்வே அமைச்சகம்
கலாச்சாரம் மற்றும் ஆன்மீக சுற்றுலாத் திட்டங்களை ரயில்வே சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது மத்திய அமைச்சர் திரு வி. சோமண்ணா
இடுகை இடப்பட்ட நாள்:
25 FEB 2026 5:17PM by PIB Chennai
நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் ஆன்மீக சுற்றுலாத் திட்டங்களை ரயில்வே சிறந்த முறையில் செயல்படுத்தி வருவதாக மத்திய ரயில்வேத் துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா தெரிவித்துள்ளார். புதுதில்லியில் உள்ள ரயில் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “கர்நாடகா பாரத் கௌரவ ரயில் – ஆயிரம் புனித தலங்களுக்கான பயணம்” என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.
இந்தப் புத்தகம் ரயில்வேயின் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை பல்வேறு சுற்றுலாத் திட்டங்களுடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இத்திட்டத்தின் கீழ், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் குறைந்த செலவில் காசி உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற வாழ்நாள் கனவை நிறைவேற்றியுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் என்று அமைச்சர் கூறினார்.
நாட்டின் நகரும் காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் குறித்த பல்வேறு தகவல்களை இந்த புத்தகம் விரிவாக எடுத்துரைக்கிறது என்று மத்திய இணையமைச்சர் திரு வி. சோமண்ணா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232731®=3&lang=1
***
TV/SV/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2232798)
வருகையாளர் எண்ணிக்கை : 11