அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நீருக்கடியில் சிறந்த தொடர்புக்கான உயர் செயல்திறன் கொண்ட ஒலி ஆண்டெனா அமைப்பின் உள்நாட்டு உருவாக்கத்தை மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை ஊக்குவிக்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
25 FEB 2026 1:19PM by PIB Chennai
மேம்பட்ட கடல்சார் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்துவதற்கான ஒரு உத்திசார் நடவடிக்கையாக, இந்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், "வீடியோ பரிமாற்றத்தோடு நீருக்கடியில் சிறந்த தொடர்புக்கான உயர் செயல்திறன் கொண்ட ஒலி ஆண்டெனா அமைப்பின் உருவாக்கம்" என்ற திட்டத்திற்காக இந்திய நிறுவனமான ஸால்டன் சிஸ்டம்ஸ் (Xalten Systems Pvt Ltd) உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த திட்டம், நீருக்கடியில் நம்பகமான, உயர் அலைவரிசை தகவல்தொடர்பை வீடியோ பரிமாற்றத்துடன் செயல்படுத்தும் திறன் கொண்ட ஒரு திட்டமாகும்.
இது அடுத்த தலைமுறை ஹைட்ரோஃபோன் வரிசை சென்சார் அமைப்புகளை உருவாக்கி, அதன் மூலம் நீருக்கடியில் சிறந்த ஒலித் தொடர்புகளை உறுதி செய்கிறது. இந்த முயற்சி சிங்கப்பூரின் சப்னெரோ பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
கடல்சார் ஆற்றல் செயல்பாடுகள், ஆழ்கடல் ஆய்வு, கடல் ஆராய்ச்சி, ஆகியவற்றில் வலுவான, உயர் திறனுடன் கூடிய நீருக்கடியில் தகவல் தொடர்பு தேவை. கோங்க்ஸ்பெர்க் மேரிடைம், சோனார்டைன், ஈவோலாஜிக்ஸ் (Kongsberg Maritime, Sonardyne மற்றும் EvoLogics) போன்ற நிறுவனங்களால் வழங்கப்படும் தற்போதைய உலகளாவிய தீர்வுகள், குறைந்த-அலைவரிசை தகவல்தொடர்புகளில் பெரும்பாலும் கவனம் செலுத்துகின்றன. முன்மொழியப்பட்டுள்ள உள்நாட்டு அமைப்பு, அதிவேக தகவல்தொடர்புக்கு உகந்ததாக அகண்ட அலைவரிசை ஹைட்ரோஃபோன்களை உருவாக்குவதன் மூலம் இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232623®=3&lang=1
***
(Release ID : 2232623)
TV/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2232730)
வருகையாளர் எண்ணிக்கை : 8