PIB Headquarters
azadi ka amrit mahotsav

அறிவியல் பூர்வ நதி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் கங்கை நதியில் உள்நாட்டு மீன்வளத்தை மீட்டெடுத்தல்

இடுகை இடப்பட்ட நாள்: 25 FEB 2026 10:55AM by PIB Chennai

கடந்த நூற்றாண்டில், கங்கை நதி அதிக பயனுள்ளதாக கருதப்பட்டது. கங்கை நதி மக்களின் வாழ்வாதாரமாக இருந்ததுடன், சமூகங்களுக்கு உணவளிப்பது மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய காரணியாகவும் இருந்தது. இருப்பினும், அண்மைய காலங்களில், நதிகளைப் பூர்வீகமாகக் கொண்ட மீன் இனங்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. வாழ்விட சீரழிவு, நதியின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள், மாசு மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடி போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த 10 ஆண்டுகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் இத்தகைய சரிவை மீட்டெடுக்கும் வகையில் ஒரு அமைதியான முயற்சி மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. மத்திய அரசின் நமாமி கங்கை திட்டத்தின் கீழ், பெரிய அளவில் அறிவியல் பூர்வமான நதி பண்ணை வளர்ப்பு திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இது நதிகளில் மீன்கள் போன்ற பல்லுயிர் பெருக்கைத்தை அதிகரிப்பதுடன் மட்டுமின்றி, சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்கும் வகையிலும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.

2017-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை 169 நதி மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் 205.5 லட்சம் உள்நாட்டு மீன் உற்பத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

முக்கிய நடவடிக்கையாக,இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் –மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், மகாநதியில் 15,134 டன் மற்றும் கிருஷ்ணா நதியில் 18,902 டன் உட்பட முக்கிய ஆறுகளில் வருடாந்திர மீன் பிடிப்பு குறித்து மதிப்பீடு செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232529&reg=3&lang=1

***

AD/SV/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2232707) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , Gujarati