தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தில்லியில் மொபைல் சேவைகளின் தரம் குறித்து ட்ராய் மதிப்பீடு செய்தது
இடுகை இடப்பட்ட நாள்:
24 FEB 2026 2:51PM by PIB Chennai
தில்லியில் மொபைல் சேவைகள் தரம் குறித்து 2026 ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட மதிப்பீடு குறித்து அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது. தில்லியில் உள்ள ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நகர்ப்புற பகுதிகள், தொழில்துறை பகுதிகள், பொது போக்குவரத்து மையங்கள் மற்றும் அதிவிரைவு வழித்தடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
2026 ஜனவரி 6 முதல் 9 வரை தில்லி நகரை சுற்றிலும் 249.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த மதிப்பீடு நடைபெற்றது. அப்போது 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் செயல்பாடு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது.
இது குறித்த விரிவான அறிக்கையை www.trai.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2232073®=3&lang=1
***
AD/IR/RK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2232207)
வருகையாளர் எண்ணிக்கை : 9