சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய அஞ்சல்துறையின் சென்னை மண்டலம் சார்பாக மண்டல சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன

இடுகை இடப்பட்ட நாள்: 23 FEB 2026 9:31PM by PIB Chennai

இந்திய அஞ்சல்துறையின் சென்னை மண்டலத்தின் “மண்டல சிறப்பு விருதுகள் 2024–25” விழா, 2026 பிப்ரவரி 23 அன்று சென்னை விக்டோரியா அரங்கில் கொண்டாடப்பட்டது.

தமிழக அரசின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தின் சென்னைப் பிரிவு முதல்வரும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கௌரவ ஆலோசகருமான டாக்டர் டி. சங்கர சரவணன் விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு, விருதுகளை வழங்கினார்.

சென்னை மண்டலத்தின் அஞ்சல் சேவைகள் இயக்குநர் மேஜர் மனோஜ், வரவேற்புரை வழங்கினார். அஞ்சல் துறைத்தலைவர் திரு ஜி. நடராஜன், விழாவிற்குத் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் டி. சங்கர சரவணன், அஞ்சல் துறையின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டி, அஞ்சல் குடும்பத்தினருடன் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

2024–25 நிதியாண்டில், சென்னை மண்டலத்தின் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு துறைகளில் இலக்குகளை அடைவதில் அதிகாரிகளும் பணியாளர்களும் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளும் சிறப்பான செயல்திறனும் பாராட்டப்பட்டன. அவர்களின் சிறப்பான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், 77 பிரிவுகளின் கீழ் மொத்தம் 262 விருதுகள் வழங்கப்பட்டன.

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2231957) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English