சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதில் மாற்றுத்திறனாளிகள் முக்கிய பங்கு வகிப்பார்கள் - உத்தராகண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 22 FEB 2026 6:26PM by PIB Chennai

திவ்ய கலா மேளா எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான கைவினைக் கலைத்திறன் கண்காட்சி வெறும் நிகழ்வு மட்டுமல்ல எனவும், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதில் மாற்றுத் திறனாளிகளின் உறுதியான பங்கை எடுத்துக் காட்டும் ஒரு சக்திவாய்ந்த தளமாகும் என்றும் உத்தராகண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் கூறியுள்ளார்.

டேராடூனில் 30-வது திவ்ய கலா மேளாவின் தொடக்க விழாவில் பேசிய அவர் மாற்றுத்திறனாளிகளுக்குப் புதிய வாய்ப்புகளுக்கான பாலங்களாக செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவை உள்ளன என்றார்.

இந்த மேளாவில் விற்பனை செய்யப்படும் தயாரிப்புகள் உலகளாவிய சந்தைகளை அடைய வேண்டும் என்றும், திறமைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் - 2016 மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளை பிரதான நீரோட்டத்தில் ஒருங்கிணைப்பதற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளன என்று இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா தெரிவித்தார்.

பிப்ரவரி 21 முதல் மார்ச் 1 வரை தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த மேளாவில் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்படுகிறது. துடிப்பான கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றுக்கும் இதில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231515&reg=3&lang=1

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2231554) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu