சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அடுத்த தலைமுறை ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்க 3 நாள் மாநாட்டை நடத்தியது ஐசிஎம்ஆர்

இடுகை இடப்பட்ட நாள்: 22 FEB 2026 4:33PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), 2026 பிப்ரவரி 19 முதல் 21-ம் தேதி வரை புது தில்லியில் உள்ள ஐசிஎம்ஆர்–தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIMR) சன்வாத் - 2026 (SANVAD 2026) என்ற அடுத்த தலைமுறை ஆராய்ச்சி முயற்சிகளுக்கான வல்லுநர் மாநாட்டை நடத்தியது.

சன்வாத் என்பது ஐசிஎம்ஆர்-ன் வருடாந்திர முன்முயற்சியாகும். இது இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இது முனைவர் பட்ட ஆராய்ச்சி திறனை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் கல்வி, தொழில்துறையைச் சேர்ந்த முன்னணி நிபுணர்களுடன் அர்த்தமுள்ள தொடர்பை உருவாக்கி சிறந்த வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. இந்த ஆண்டு இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள மூத்த விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 400 பேர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சிறப்புமிக்க மற்றும் புகழ்பெற்ற வல்லுநர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

சிறந்த ஆராய்ச்சிகளை அங்கீகரிக்கும் ஒரு நிறைவு அமர்வு மற்றும் விருது வழங்கும் விழாவுடன் மாநாடு நிறைவடைந்தது. 2027-ம் ஆண்டு சன்வாத் நிகழ்வை ஹைதராபாத்தில் உள்ள ஐசிஎம்ஆர்–தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231485&reg=3&lang=1

***

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2231544) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी