அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ருவாண்டா தகவல் தொடர்பு அமைச்சருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 21 FEB 2026 4:13PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொது மக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங், ருவாண்டா தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பாவ்லா இங்காபயர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளும் இருதரப்பு ஒத்துழைப்பிற்கான ஒரு கட்டமைப்பை ஆராய்ந்த நிலையில், ஏஐ, உயிரி தொழில்நுட்பம் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், புதுமை சூழலமைப்புகள் மற்றும் அடுத்த தலைமுறைத் துறைகளில் ருவாண்டாவுடனான தனது ஈடுபாட்டை ஆழப்படுத்த இந்தியா தயாராக உள்ளது என்று ஜிதேந்திர சிங் கூறினார்.

இந்தியா மற்றும் ருவாண்டா நாடுகள், செயற்கை நுண்ணறிவு , உயிரித் தொழில்நுட்பம், அணு ஆற்றல், சுகாதார தொழில்நுட்பம் போன்ற புதிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்தன. புதுமை மையங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழலை கொண்ட நாடாக வளர்ந்து வருவதாகவும், அணு மற்றும் விண்வெளி போன்ற துறைகளிலும் தனியார் பங்கேற்பு அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ருவாண்டா, இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இருப்பதால், திறன் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் வளர்ச்சியில் முதலீடு செய்து வருவதாக அதன் அமைச்சர் கூறினார்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை துறைகளில் இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம்  மூலம் கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்பை முன்னெடுக்க ஒப்புக்கொண்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231202&reg=3&lang=1

***

TV/PKV/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2231301) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी