வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம் உள்நாட்டு உற்பத்தியை வலுவாக அதிகரிக்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
20 FEB 2026 12:13PM by PIB Chennai
₹1.91 லட்சம் கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் ஊக்கத்தொகைத் (பிஎல்ஐ - PLI) திட்டம், இந்தியாவின் உற்பத்தித் தளத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய முயற்சியாகுப். 14 உத்திசார் துறைகளில் உற்பத்தி அதிகரிக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்துறைகளில் 836 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், இந்தத் திட்டம் வலுவான தொழில்துறை நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இந்தத் தொடங்கப்பட்டதிலிருந்து, இது தொழில்துறையினரிடையே நிலையான வரவேற்பைப் பெற்று உற்பத்தி திறன் அதிகரிப்பை நிரூபித்துள்ளது.
2025 டிசம்பர் 31 நிலவரப்படி, இத்திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் பின்வருமாறு:
* அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள்: 14 துறைகளில் 836 விண்ணப்பங்கள்.
* முதலீடு: ₹2.16 லட்சம் கோடிக்கும் அதிகமான ஒட்டுமொத்த முதலீடு.
* உற்பத்தி / விற்பனை: ஒட்டுமொத்த விற்பனை ₹20.41 லட்சம் கோடியைத் தாண்டியது.
* ஏற்றுமதிகள்: ஒட்டுமொத்த ஏற்றுமதி ₹8.3 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
* வேலைவாய்ப்பு: 14.39 லட்சத்திற்கும் அதிகமான நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* ஊக்கத்தொகை வழங்கல்: 2025 டிசம்பர் 31 நிலவரப்படி ₹28,748 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த புள்ளி விவரங்கள், 14 துறைகளில் முதலீட்டு வரவு, உற்பத்தி விரிவாக்கம், ஏற்றுமதி வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் நீடித்த உத்வேகத்தைக் எடுத்துக்காட்டுகின்றன.
இந்தியாவின் உற்பத்தித் தளத்தை வலுப்படுத்தவும், இறக்குமதி சார்புநிலையைக் குறைக்கவும், உலகளாவிய போட்டித்தன்மையை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் ஒரு உத்திசார் முயற்சியாக உற்பத்தி உடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் 2020-ல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் செயல்திறன் இணைக்கப்பட்ட நிதி ஊக்கத்தொகைகள் மூலம் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இது நிறுவனங்கள் தங்களது திறனை விரிவுபடுத்தவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் ஊக்குவிக்கிறது.
***
(Release ID: 2230621)
AD/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2230702)
வருகையாளர் எண்ணிக்கை : 14