அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஜார்க்கண்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் பண்டைய காலத்தில் உள்ள சதுப்பு நிலக்காடுகள் மற்றும் ஆறுகளின் படிமங்களை மீட்டெடுக்க உதவுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2026 3:43PM by PIB Chennai
ஜார்க்கண்ட் மாநிலததில் உள்ள திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் பண்டைய காலத்தில் மனிதர்கள் அல்லது டைனோசர்கள் போன்ற விலங்கினங்களுக்கு முன்பு இருந்த சுற்றச்சூழல் அமைப்பின் சான்றுகளை வெளிப்படுத்துகிறது. மேலும் இது போன்ற நிலக்கரி சுரங்கங்களில் ஏறத்தாழ 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்த அடர்ந்த சதுப்பு நிலக்காடுகள் மற்றும் ஆறுகளின் படிமங்களை மீட்டெடுக்க உதவுகிறது.
கடல் மட்டம் உயர்வது அல்லது பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் சூழல் காரணமாக காடுகள் மற்றும் ஆறுகள் பூமியில் புதையுண்டது குறித்த ஆய்வுகளின் போது பல்வேறு சான்றுகள் வெளிவருகிறது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் வேறு சில பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட விலங்கினங்கள் மற்றும் வண்டல் மண்ணில் காணப்படும் சான்றுகளின் அடிப்படையில் அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுடப் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற நிறுவனமாக இயங்கி வரும் பீர்பால் சாஹினி அறிவியல் நிறுவனம் தலைமையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள வடக்கு கரன்குரா படுகையில் உள்ள அசோக நிலக்கரி சுரங்கங்களிலிருந்து பண்டைய தாவரவியல் மற்றும் புவி வேதியியல் சான்றிதழ் சேகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230221®=3&lang=1
****
TV/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2230497)
வருகையாளர் எண்ணிக்கை : 10