கலாசாரத்துறை அமைச்சகம்
இந்தியா – மங்கோலியா வலுவான ஆன்மீகம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் கொண்ட நாடுகளாக திகழ்கின்றன- மத்திய அமைச்சர் ஷெகாவத்
இடுகை இடப்பட்ட நாள்:
19 FEB 2026 3:54PM by PIB Chennai
இந்தியா – மங்கோலியா வலுவான ஆன்மீகம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் கொண்ட நாடுகளாக திகழ்கின்றன என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். இவ்விரு நாடுகளிடையே தூதரக ரீதியிலான உறவுகள் ஏற்பட்டு 70 ஆண்களைக் குறிக்கும் வகையில் 2 நாள் சர்வதேச மாநாட்டை புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்து அமைச்சர் உரையாற்றினார்.
இவ்விரு நாடுகளிடையே கலாச்சாரப் பாரம்பரியத்தை பரிமாறிக் கொள்வதன் மூலம் வானியல், அறிவியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் தத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவிடும் என்று கூறினார். கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மங்கோலியாவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது ஆன்மீகத் தன்மையுடன் கூடிய அண்டை நாடாக மங்கோலியா திகழ்கிறது என்று தெரிவித்திருந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
இந்த மாநாட்டில் இந்தியா, மங்கோலியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த 31 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் 75 ஆராய்ச்சிக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
மங்கோலிய நாட்டின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சிறப்புக் கண்காட்சி ஒன்றையும் அவர் தொடங்கி வைத்தார். இந்தக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக வரும் 25-ம் தேதி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230228®=3&lang=1
****
TV/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2230404)
வருகையாளர் எண்ணிக்கை : 6