பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் நிர்வாகத்திற்காக இந்தியா–போர்ச்சுகல் இணைந்து பணியாற்ற ஒரு கூட்டு பணிக்குழுவை அமைக்க முடிவு
இடுகை இடப்பட்ட நாள்:
17 FEB 2026 5:52PM by PIB Chennai
செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள போர்ச்சுகல் அமைச்சர் கோன்சாலோ மாதியாஸ் -உடன் நடந்த சந்திப்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் நிர்வாகத்திற்காக இந்தியா–போர்ச்சுகல் இணைந்து பணியாற்ற ஒரு கூட்டு பணிக்குழுவை அமைக்கும் யோசனையை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கால் முன்வைக்கப்பட்டது.
நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் டிஜிட்டல் ஆட்சி துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. குறிப்பாக டிஜிட்டல் ஓய்வூதியம், குறைதீர் முறைமை, ஏஐ மூலம் ஆவண செயலாக்கம் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2,000 பழைய விதிகள் நீக்கப்பட்டதாகவும், குறைதீர் முறைமை 95% தீர்வு விகிதத்தை எட்டியுள்ளதாகவும் டாக்டர் சிங் தெரிவித்தார்.
போர்ச்சுகல் அமைச்சர், “முதலில் எளிமைப்படுத்தல், பிறகு டிஜிட்டல் மாற்றம்” என்ற கொள்கையை வலியுறுத்தினார். ஏஐ பயன்பாட்டில் மனித மேற்பார்வை அவசியம் என்றும் கூறினார். இரு நாடுகளும் வர்த்தகம், தொழில்நுட்பம், கல்வி போன்ற துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒப்புக்கொண்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229203®=3&lang=1
****
TV/PKV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2229350)
வருகையாளர் எண்ணிக்கை : 6