தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புவனேஸ்வரில் இரண்டு நாள் மண்டல தொழில் மற்றும் வேலைவாய்ப்பு மாநாடு தொடக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 17 FEB 2026 3:25PM by PIB Chennai

ஓடிசா மாநில  தொழில் மற்றும் ஊழியர் மாநிலக் காப்பீட்டு துறைக்கான இணையமைச்சர் திரு கணேஷ் ராம் சிங் குந்தியா இன்று ஓடிசாவில் இரண்டு நாள் மண்டலத் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு, தொழில் துறை செயலாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் மத்திய தொழில் மற்றும் வேலைவாய்ப்புத்துறை  செயலாளர் திருமதி வந்தனா குர்ணானி, அமைச்சக மூத்த அதிகாரிகள், ஓடிசா, பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பிரதிநிதிகள், ஊழியர் காப்பீட்டு நிறுவனம், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள்,  மத்திய தொழில் ஆணையர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு, மத்திய அமைச்சகத்தால் நாடு முழுவதும் திட்டமிடப்பட்ட ஐந்து மண்டல மாநாடுகளில் நான்காவது நிகழ்வு ஆகும். இதன் நோக்கம் நான்கு தொழிலாளர் குறியீடுகளை ஒழுங்காக செயல்படுத்துவதும்,  முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பதும் ஆகும்.

திரு கணேஷ் ராம் சிங் குந்தியா பிரதிநிதிகளை வரவேற்று, தொழிலாளர் சட்டங்கள் அமலில் வந்துள்ள முக்கிய நேரத்தில் நாட்டின் நிலையை குறிப்பிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடியால் மேற்கொள்ளப்பட்ட  தொழிலாளர் சீர்திருத்தங்களுக்கு நன்றியை தெரிவித்தார்.

மாநில அரசு கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நல்வாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், சமூக நீதி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தில் தொழிலாளர் சட்டங்களை செயல்படுத்த முனைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தொழிலாளர் ட்டங்களை இந்தியாவின் தொழிலாளர் சட்ட அமைப்பில் வரலாற்றுச் சீர்திருத்தமாகக் குறிப்பிட்ட திருமதி வந்தனா குர்ணானி,, பல மத்திய சட்டங்களை நான்கு சட்டங்களில்  ஒருங்கிணைப்பது மூலம் ஊழியர்களின் நலன்கள், வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதாக விளக்கினார்.

மாநாட்டில் புதிய தொழிலாளர் சட்டங்களுக்கான விதிகள், தயார்நிலை, மத்திய–மாநில ஒருங்கிணைப்பு மற்றும் பணியாளர் நலன்கள் குறித்து விரிவான விவாதங்கள் நடந்தன.

மாநாடு, விதிகள் மற்றும் விதிமுறைகளை விரைவாக செயல்படுத்தும், குறைபாடுகளை கண்டறியும்,

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229108&reg=3&lang=1

 

****

TV/PKV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2229297) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी