நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
31 துறைகளில் தேசிய நுகர்வோர் உதவி எண் வசதியின் மூலம் 52 கோடி ரூபாய் திரும்ப தரப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
17 FEB 2026 2:56PM by PIB Chennai
கடந்த 9 மாதங்களில் (2026 ஏப்ரல் 25 முதல் ஜனவரி 31 வரை) பணத்தை திரும்ப பெறுவது தொடர்பாக 31 துறைகளில் 79,521 நுகர்வோர் குறைகளுக்கு தேசிய நுகர்வோர் உதவி எண் மூலம் தீர்வு காணப்பட்டு 52 கோடி ரூபாய் திரும்ப தரப்பட்டுள்ளது. வழக்கு தொடரும் நிலைக்கு முன்னதாக பணம் திரும்ப பெறுவது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நுகர்வோர் ஆணையங்களை அணுகாமல் நுகர்வோர் உரிய நேரத்தில் நிவாரணம் பெற முடிந்துள்ளது.
அதிகபட்சமாக இ-வணிகத் துறையில் பதிவான 47,743 புகார்கள் தொடர்பாக சுமார் 36 கோடி ரூபாய் திரும்ப தரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுற்றுலாத்துறையில் உதவி எண் மூலம் புகார்கள் பெறப்பட்டு 4 கோடி ரூபாய் திரும்ப தரப்பட்டுள்ளது. முகமை சேவைகளில் 1,103 புகார்களுக்கும், மின்னணுப் பொருட்கள் துறையில் 788 புகார்களுக்கும் பொதுக் காப்பீட்டுத்துறையில் 293 புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நுகர்வோர் தங்களின் துறைகளை 17 மொழிகளில் பதிவு செய்ய தேசிய நுகர்வோர் உதவி எண் ஒற்றைச் சாளர அணுகல் தளமாக செயல்படுகிறது. இதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண்: 1915, INGRAM போர்ட்டல், வாட்ஸ்-அப் / எஸ்எம்எஸ் அனுப்புதவற்கான எண்: 8800001915, மின்னஞ்சல்: nch-ca[at]gov[dot]in
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2229099®=3&lang=1
***
AD/SMB/RJ/SH
(रिलीज़ आईडी: 2229266)
आगंतुक पटल : 56