சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
ஹஜ் 2026 வழிகாட்டுநர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி புதுதில்லியில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
16 FEB 2026 3:38PM by PIB Chennai
ஹஜ் 2026-க்கான ஹஜ் வழிகாட்டுநர்களுக்கான புத்தாக்க பயிற்சிக்கு புதுதில்லி விஞ்ஞான் பவனில் சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஏற்பாடு செய்தது. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் இதைத் தொடங்கி வைத்தார். யாத்ரீகர்களின் அத்தியாவசிய நிர்வாக மற்றும் மருத்துவ உதவி வழங்கும் வகையில், இந்த வழிகாட்டுநர்கள் சவுதி அரேபியாவில் இரண்டரை மாதங்கள் தங்கியிருப்பார்கள். இந்த வழிகாட்டுநர்கள் அனைத்து யாத்ரீகர்களுக்கும் பாதுகாப்பையும், தேவையான சேவைகளையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு அரசு நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், ஹஜ் மேலாண்மை என்பது இந்தியா மேற்கொள்ளும் மிகப்பெரிய நடவடிக்கை என்று கூறினார். இந்த வழிகாட்டுநர்கள், சுமார் 1.75 லட்சம் யாத்ரீகர்களுக்கான சேவை பொறுப்பை ஏற்பதுடன், சவுதி அரேபியாவில் இந்திய அரசு பிரதிநிதியாக உள்ளனர் என்று தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2228680®=3&lang=1
***
TV/IR/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2228864)
வருகையாளர் எண்ணிக்கை : 9