பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமானப் படையின் மேற்கு மண்டல தலைமையகம் சார்பில் கூட்டு நடவடிக்கைகள் குறித்த உயர் நிலை மாநாடு நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 06 FEB 2026 4:56PM by PIB Chennai

விமானப் படையின் மேற்குப் பிரிவுத்  தலைமையகம், 2026 பிப்ரவரி 05, 06, ஆகிய நாட்களில் அனைத்துப் பிரிவு கூட்டு நடவடிக்கைகள் பயிற்சிக் கட்டமைப்பின் கீழ் கூட்டு நடவடிக்கைகள் தொடர்பான உயர்நிலை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. சிக்கலான கள சூழலில் இந்திய பாதுகாப்புப் படைகளின் கூட்டு செயல்பாட்டுத் திறன்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன், போர் நடவடிக்கை நிலையில் படைப்பிரிவுகளுக்கு இடையே தொடர்புகளை வலுப்படுத்துவதில் இந்த மாநாடு கவனம் செலுத்தியது.

தலைமையகத்தின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள், ராணுவம், கடற்படை, விண்வெளிப் பாதுகாப்பு அமைப்பு, பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் இந்த விவாதங்களில் கலந்து கொண்டனர்.

தனது தொடக்க உரையில்,  விமானப்படை மேற்கு கட்டளையின் மூத்த விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் ஜே.எஸ். மான் பேசுகையில், தற்கால, எதிர்கால போர்களில் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வான், நிலம், கடல், விண்வெளி இணையதள களங்களில் தடையற்ற ஒருங்கிணைப்புக்கான அணுகுமுறையின் அவசரத் தேவையை அவர் எடுத்துரைத்தார்.

 

மாநாட்டின் முடிவில், விமானப்படை மேற்கு கட்டளைத் தளபதி ஏர் மார்ஷல் ஜீதேந்திர மிஸ்ரா, ஆபரேஷன் சிந்தூரிலிருந்து முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொண்டு, எதிர்காலப் போர்களை எதிர்கொள்வது குறித்த விரிவான உரையை நிகழ்த்தினார்.

***

(Release ID: 2224488)

TV/PLM/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2224944) வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi