சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஃபாஸ்டேக் வருடாந்திர அனுமதி அட்டை எண்ணிக்கை 50 லட்சம் பயனர்களை கடந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
06 FEB 2026 4:53PM by PIB Chennai
'பயணத்தை எளிதாக்கும்' அம்சத்தை மேம்படுத்தும் வகையில், ஃபாஸ்டேக் (FASTag) வருடாந்திர அனுமதி அட்டை, 2025 ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குள் அதில் 26.55 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டு, 50 லட்சம் பயனர்களைக் கடந்து ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் ஆகியவற்றில் தடையற்ற, எளிய பயணத்தை வழங்குவதற்காக தனியார் வாகன உரிமையாளர்களிடையே வருடாந்திர பாஸ் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இந்த நடவடிக்கை வகை செய்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை பயனர்களிடையே ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் மீதான விருப்பம் அதிகரித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பில் பதிவுசெய்யப்பட்ட மொத்த கார் பரிவர்த்தனைகளில் சுமார் 28% இப்போது ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் வழியாகவே மேற்கொள்ளப்படுகிறது.
கூடுதலாக, பிராந்திய வாரியான பகுப்பாய்வில், சண்டிகர் பயன்பாட்டின் அடிப்படையில் முன்னணியில் உள்ளது. இது 14% என்ற அளவாகும். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு 12.3%, தில்லி 11.5% என்ற அளவில் உள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய விரைவுச் சாலைகளில் உள்ள சுமார் 1,150 கட்டண மையங்களில் ஏற்கப்படுகிறது. இந்த வருடாந்திர பாஸ், ஒரு வருட காலம் செல்லுபடியாகும். அதில் 200 முறை சுங்கச்சாவடிகளை கடப்பது அல்லது ஓராண்டுக்கு 3,000 ரூபாய் கட்டணம் செலுத்துவதன் மூலம் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேவையை இது நீக்குகிறது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற பயணத்தை ஊக்குவிப்பதில் ஃபாஸ்டேக்-கின் வருடாந்திர பாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.
***
(Release ID: 2224484)
TV/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2224935)
வருகையாளர் எண்ணிக்கை : 10