மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் மொத்தம் 17,990 பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தக மையங்கள் செயல்பாட்டில் உள்ளன – மததிய அமைச்சர் திரு ஜெ பி நட்டா

இடுகை இடப்பட்ட நாள்: 06 FEB 2026 1:47PM by PIB Chennai

பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தக மையங்கள் திட்டததின் கீழ், 2025 டிசம்பர் 31 அன்று நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 17,990 மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா தெரிவித்துள்ளார்.

இதில் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 1515 மக்கள் மருந்தக மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

இத்திட்டத்தின் கீ்ழ், 2,110 மருந்துகளும் 315 அறுவை சிகிச்சை உபகரணங்கள், மருத்துவப் பொருட்களும் சாதனங்களும் அடங்கும். இவை இதய நோய், புற்றுநோய் எதிர்ப்பு, நீரிழிவுநோய், தொற்று எதிர்ப்பு, ஒவ்வாமை, இரைப்பை மற்றும் குடல் நோய்களுக்கான மருந்துகள் போன்ற அனைத்து முக்கிய நோய்களுக்கான மருந்துகளும் மலிவு விலையில் கிடைக்கிறது.

மேலும், பெண்களுக்கான புரதச் சத்துப் பொடி மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்களும் இந்த மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.  தொழில்முனைவோர், அரசுசாரா நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள், நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு இந்த மையங்கள் தொடங்கப்படுகின்றன. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள  www.janaushadhi.gov.in  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து முறையான அனுமதி பெற்று இந்த மையங்களைத் தொடங்க முடியும். 

உலக சுகாதார அமைப்பின் உற்பத்தி நடைமுறைகள் மற்றும் சான்றளிக்கப்பட்ட ஆலைகளிலிருந்து மட்டுமே மருந்துகள் பெறப்பட்டு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பால் நேரடி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இந்த மையங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ பி நட்டா இதனைத் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 2224375)

TV/SV/KPG/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2224900) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी