சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நோய் கண்காணிப்பை வலுப்படுத்தும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம்
प्रविष्टि तिथि:
06 FEB 2026 5:31PM by PIB Chennai
நாட்டின் நோய் கண்காணிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்தத் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார்.
ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் (ஐடிஎஸ்பி) மற்றும் 2021 முதல் நடைமுறைக்கு வந்த ஒருங்கிணைந்த சுகாதாரத் தகவல் தளம் (ஐஎச்ஐபி) மூலம் காகிதமற்ற, நிகழ்நேர கண்காணிப்பு உறுதி செய்யப்படுகிறது. பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், மாநில மற்றும் மண்டல கிளைகள், உயிர் பாதுகாப்பு நிலை-3 ஆய்வகங்கள் மற்றும் பெருநகர கண்காணிப்பு அலகுகள் அமைக்கப்படுகின்றன.
வைரஸ் ஹெபடைடிஸ், ரேபிஸ், லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் ஜூனோசிஸ் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு தேசிய திட்டங்களை என்சிடிசி செயல்படுத்துகிறது. மக்கள் தொகை அடர்த்தி மற்றும் நோய் பாதிப்பு அதிகம் உள்ள நிலை-1 மற்றும் நிலை-2 நகரங்களில் பெருநகர கண்காணிப்பு அலகுகள் நிறுவப்படுகின்றன. இதற்கான நிதி தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
***
(Release ID: 2224524)
TV/VK/RK
(रिलीज़ आईडी: 2224891)
आगंतुक पटल : 57