சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவத்தை மேம்படுத்த மத்திய அரசு தீவிரம்: அமைச்சர் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
06 FEB 2026 5:28PM by PIB Chennai
மரபணுவியல், துல்லியமான நோயறிதல் மற்றும் இலக்கு நோக்கிய சிகிச்சைகள் உள்ளிட்ட தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவ முறைகளை மேம்படுத்த இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் மக்களவையில் தெரிவித்தார்.
மத்திய உயிரி தொழில்நுட்பம் துறையின் கீழ் 'ஜெனோம் இந்தியா' திட்டம் மூலம் நாட்டின் பல்வேறு மக்கள் பிரிவுகளைச் சேர்ந்த 10,000 நபர்களின் முழு மரபணு வரிசைமுறை தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் 'பினோம் இந்தியா' தேசிய பயோபேங்க் அமைக்கப்பட்டு, மரபணு மற்றும் வாழ்க்கைமுறை தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. மரபணு கோளாறுகளைக் கையாள 'உமிட்' திட்டத்தின் கீழ் நிதான் மையங்கள் நிறுவப்பட்டு, கருவிலேயே நோயறிதல் மற்றும் மரபணு ஆலோசனை வழங்கப்படுகிறது.
மருந்து மற்றும் மருத்துவ தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சியை ஊக்குவிக்க நிதி உதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக, நுரையீரல் மற்றும் மார்பகப் புற்றுநோயாளிகளுக்கு இலவச மூலக்கூறு நோயறிதல் சேவைகளை வழங்க 'டைமண்ட்ஸ்' திட்டம் 25 மையங்களில் செயல்படுத்தப்படுகிறது.
உள்நாட்டு மருத்துவ கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க 'மெட்டெக் மித்ரா' போன்ற அமைப்புகள் மூலம் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு அரசு ஆதரவு அளிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
***
(Release ID: 2224521)
TV/VK/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2224872)
வருகையாளர் எண்ணிக்கை : 8