உரங்கள் துறை
தமிழ்நாட்டில் உரங்கள் கையிருப்பு போதிய அளவில் உள்ளது – மத்திய அமைச்சர் ஜெ பி நட்டா
இடுகை இடப்பட்ட நாள்:
06 FEB 2026 5:23PM by PIB Chennai
தமிழ்நாட்டில் யூரியா டிஏபி போன்ற முக்கிய உரங்களின் கையிருப்பு போதிய அளவில் உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. 2025–ம் ஆண்டு காரீப் பருவத்திலும் தற்போதைய ரபி பருவத்திலும் விவசாயத்திற்குத் தேவையான உரங்கள் போதிய அளவு கையிருப்பில் உள்ளதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. தற்போதைய ரவி பருவத்தில், பிப்ரவரி 2-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் உரங்களின் கையிருப்பு அதன் விற்பனை விகிதத்தைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது. குறிப்பாக யூரியா உரத்தின் தேவை 4.97 லட்சம் மெட்ரிக் டன் என்ற தேவைக்கு எதிராக அதன் கையிருப்பு 6.06 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது.
இந்த உரத்தின் விற்பனை 4.77 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. விவசாயிகளுக்கு தரமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உரங்கள் தரக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், தரம் குறைந்த உரங்கள் தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் 4,11,350 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 15,024 எண்ணிக்கையிலான விளக்கம் கோரும் நோட்டீசுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக 783 முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தக் காலகட்டத்தில் மாநில அரசு அதிகாரிகள் 20,727 சோதனைகளை மேற்கொண்டு 50 நபர்களின் உரிமங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
சேலம், ஈரோடு, தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் போலியான அல்லது கலப்படம் செய்யப்பட்ட உரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் முக்கிய உரங்கள் குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய உரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2224509)
TV/SV/KPG/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2224837)
வருகையாளர் எண்ணிக்கை : 25