சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சட்ட உதவி மற்றும் இந்திய தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் திட்டங்களின் அமலாக்கத்திற்கு நிதி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம மெஹ்வால்
இடுகை இடப்பட்ட நாள்:
06 FEB 2026 1:39PM by PIB Chennai
பாதிக்கப்பட்ட மக்கள் பயனடையும் வகையில் இந்திய தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தால் பல்வேறு சட்ட உதவித் திட்டங்களின் வாயிலாக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் நீதிக்கான முழுமையான அணுகுமுறைகளுக்கு புதுமையான தீர்வுகளை வடிவமைத்தல் என்ற திட்டத்தின் கீழ், இதுவரை 1.12 கோடி பேர் பயனடைந்துள்ளனர். மத்திய அரசின் இது போன்ற திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழக்கு சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆணையத்தின் கவனிக்கப்படாத, பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் ஆற்றல் மற்றும் மீள்திறனுக்கு ஆதரவளிக்கும் திட்டம் என்பது கைதிகள், விசாரணைக் கைதிகள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ள மக்களுக்கு விரிவான சட்ட உதவியை வழங்குவதற்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட ஒரு முன்முயற்சியாகும். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு உயர் முன்னுரிமை வழங்குகிறது. இலவச சட்ட உதவி ஆலோசனை, பிணை மற்றும் பரோல் போன்ற நடவடிக்கைகளுக்கு உதவுவதுடன் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைக் குறைப்பதற்கும் உதவுகிறது.
படை வீரர்களுக்கான குடும்ப நலத்திட்டம் 2025 ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது. இது பாதுகாப்புப் பணியாளர்கள்,முன்னாள் படை வீரர்கள் மற்றும அவர்களது குடும்பங்களுக்கு குறிப்பாக சொத்து, குடும்பவிவகாரம், வாரிசுரிமை போன்ற அம்சங்களில் இலவச சட்ட உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சட்டத்துறை இணையமைச்சர் திரு அர்ஜூன்ராம் மெஹ்வால் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224367®=3&lang=1
***
TV/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2224629)
வருகையாளர் எண்ணிக்கை : 9