அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தேசிய பல்துறை சைபர் அமைப்பு முறைகள் இயக்கத்தின் செயல்பாடுகள்

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 3:24PM by PIB Chennai

2018–2027 காலகட்டத்திற்கு 3,660 கோடி ரூபாய் மொத்த மதிப்பில், தேசிய பல்துறை சைபர் அமைப்பு முறைகள் இயக்கத்தை (NM-ICPS) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயல்படுத்தி வருகிறது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், இணையம் சார்ந்த செயல்பாடுகள், தரவு பகுப்பாய்வு, ரோபாட்டிக்ஸ் மற்றும் தன்னியக்க அமைப்புமுறைகள், சைபர் பாதுகாப்பு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் போன்ற அதிநவீன சைபர்-இயல் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்துவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது

நாடு முழுவதும் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் மொத்தம் 25 தொழில்நுட்ப புதுமை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், ஐஐடி கான்பூர், ஐஐஎஸ்சி பெங்களூரு, ஐஎஸ்எம் தன்பாத் மற்றும் ஐஐடி இந்தூரில் உள்ள நான்கு  தொழில்நுட்ப புதுமை மையங்கள், ஆராய்ச்சி முடிவுகளை நடைமுறைப்படுத்தும்  அமைப்புகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. அவை முறையே சைபர் பாதுகாப்பு, ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புமுறைகள், ஆய்வு முதல் செயலாக்கம் வரை சுரங்க தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன.

தேசிய பல்துறை சைபர் அமைப்பு முறைகள் இயக்கம், தொழில் மற்றும் அரசின் கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துதல், சைபர் அமைப்புமுறைகள் அடிப்படையில் சரிபார்க்கப்பட்ட தொழில்நுட்பங்களை அளவிடுதல் மற்றும் நீடித்த சமூக தாக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு செயல்திட்டத்தை முன்வைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223739&reg=3&lang=1

***

TV/BR/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2224384) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी