மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் மீன்வள மேம்பாட்டுத் திட்டம்: புதுச்சேரி மீனவப் பெண்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கு நிதியுதவி

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 5:20PM by PIB Chennai

பிரதமர் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மீன்வளக் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீ செங்கழுநீரம்மன் மீனவப் பெண்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கு, ஆழ்கடல் மீன்பிடிப் படகு மற்றும் உபகரணங்கள் வாங்க ₹72 லட்சம் மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்த தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்  ₹88 லட்சம் கடனுதவி வழங்கியுள்ளது.

இது குறித்துப் பேசிய மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, நீலப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் கூட்டுறவுச் சங்கங்களின் பங்கு முக்கியமானது எனத் தெரிவித்தார். மேலும், மீன்வளத் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர்கள் திரு. எஸ்.பி. சிங் பாகல் மற்றும் திரு. ஜார்ஜ் குரியன் ஆகியோர் மீன்பிடித் துறைமுகங்களை நவீனப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளனர். இத்திட்டங்கள் மூலம் ஆழ்கடல் மீன்பிடிப்புத் திறன் அதிகரிப்பதோடு, சுமார் 3 கோடி மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படும். தற்சார்பு இந்தியா கனவை நனவாக்க இத்தகைய கூட்டுறவு முன்மாதிரிகள் உதவும் என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223883&reg=3&lang=1

***

TV/VK/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2224344) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी