பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புஜ் ராணுவ மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை முகாமை பாதுகாப்புச் செயலாளர் பார்வையிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 6:55PM by PIB Chennai

புஜ் ராணுவ மருத்துவமனையில் நடைபெற்ற கண் அறுவை சிகிச்சை முகாமை பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், தென் பிராந்திய தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் உடன் இணைந்து பார்வையிட்டார். புதுதில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை உடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது. பிப்ரவரி 3 முதல் 5 வரை நடைபெற்ற முகாமில் கட்ச் பிராந்தியத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்தனர்.

இந்த முயற்சியைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர், இந்திய ராணுவம் வீரர்களின் நலன் மற்றும் ராணுவ-குடிமக்கள் ஒத்துழைப்புக்கு இது ஒரு பாராட்டத்தக்க எடுத்துக்காட்டு என்று விவரித்தார். தொலைதூர மற்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள பயனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் இத்தகைய விழிப்புணர்வுத் திட்டங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி அவர் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்தச் செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223996&reg=3&lang=1

***

TV/BR/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2224326) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , हिन्दी