சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மாளவியா இயக்க ஆசிரியர் பயிற்சி மையத்தில் 15வது ஆசிரியர் அறிமுகத் திட்டம் தொடங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2026 7:27PM by PIB Chennai

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மாளவியா இயக்க ஆசிரியர் பயிற்சி மையம் 2026 பிப்ரவரி 03 முதல் 15 வது ஆசிரியர் அறிமுக திட்டத்தை (FIP) நடத்தி வருகிறது. தொடக்க விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவில் தலைமை உரை நிகழ்த்திய புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள், கல்விசார்ந்த புதுமைகள் மற்றும் கிராமப்புற மறுசீரமைப்புத் துறையின் இயக்குநர் பேராசிரியர் கே. தரணிக்கராவ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் பாடவியல் மேம்பாடு தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்களுடன், ஆசிரியர்களைத் தயார்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், தேசியக் கல்விக் கொள்கை 2020க்கு ஏற்ப பாட விஷயங்களில் நிபுணத்துவம் பெறுவதில் மாணவர்களின் ஆர்வத்தை அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். பிர்லா சர்வதேச பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.பி. மாத்தூர், தேசிய கல்விக் கொள்கை 2020 இன் சமகால வளர்ச்சியில் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களின் பங்கு, கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம், பாடவியல், மாணவர்களின் மனநிலையையும், நடத்தையையம் புரிந்துகொள்வதில் உள்ள சவால்கலாய் எடுத்துரைத்தார்.
4 வாரங்கள் நடைபெறும் ஆசிரியர் அறிமுகத் திட்டம், மார்ச் 2, 2026 அன்று முடிவடையும்.
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2224158)
வருகையாளர் எண்ணிக்கை : 53