சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முக்கிய சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை நெறிமுறைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
05 FEB 2026 3:31PM by PIB Chennai
நாட்டில் வனம், வனவிலங்குகள், மற்றும் பல்லுயிர் ஆகியவற்றின் பாதுகாப்பு தவிர இதர சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
அவை,
நீர் (மாசுபாட்டைத்தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) திருத்தச் சட்டம் 2024
காற்று (மாசுபாட்டைத்தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) திருத்தச் சட்டம் 1981
சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986 மற்றும் தேசிய தலைநகர் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றுத் தரமேலாண்மை ஆணையச் சட்டம் 2021 ஆகியவை அடங்கும்.
நாட்டில் தற்போது செயல்பாட்டில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு திட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகின்றன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், வகுக்கப்பட்டுள்ள திட்டங்களை முறையாக அமல்படுத்துவதற்கு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில சுற்றுச்சூழல் துறைகள், மதிப்பீட்டு அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியக் குழுக்கள் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் நிர்வாக நடைமுறைகளின்படி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223753®=3&lang=1
****
TV/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2224133)
வருகையாளர் எண்ணிக்கை : 13